தொலைநோக்கு பிரதேசத்திற்கான அா்ப்பணிப்புமிக்க பொதுச்சேவை.

 

செயற்பணி                    

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வளங்களின் உச்சபயன்பாட்டின் மூலமான

வினைத்திறன்மிக்க சேவையை வங்கல்

வரலாற்று கண்ணோட்டம்   

யாழ்ப்பாணம் முன்னர் வலிகாமம் ,வடமராட்சி , தென்மராட்சி என மூன்று பிாிவுகளாக பிாிக்கப்பட்டிருந்தது.வலிகாமம் எனும் தனிப் பெரும் பிரிவு  நிா்வாகக் கட்டமைப்புக்களைக் பரந்துபடுத்தும் நோக்கில் வலிகாமம் கிழக்கு , வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் மேற்கு,வலிகாமம் தெற்கு,வலிகாமம் தென் மேற்கு எனும் ஐந்து  நிா்வாகக் பிாிவுகளாக காலக் கிரமத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு எல்லையாக உவா் நீரோியும் வடக்கு எல்லையாக வடமராட்சி தெற்கு பிரதேச செயலக பிரிவும் மேற்கு எல்லையாக நல்லூர் உடுவில் பிரதேச செயலக பிரிவுகளும் தெற்கு எல்லையாக நல்லூர் பிரதேச செயலக பிாிவுகளும் உள்ளன.இலங்கை சுதந்திரமடைந்த 1948 இல் உள்ள நிருவாக முறை ஆங்கில ஆட்சியாளர் நிருவாக முறை ஆங்கில ஆட்சியாளர் நிா்வாக முறையே அடிப்படையாக கொண்டிருந்தது. இதில் பிரதேசங்கள் தோறும் மணியகாரா்களையும் கிராமங்கள் தோறும் கிராமத்தலைவர்களையும் நியமதித்து நிதிதிரட்டலையும் நிருவாகத்தையும் செயற்படுத்தினாா்கள்.இலங்கை சுதந்திரமடைந்த 1948 இன் பின் உள்ள நிருவாக முறை ஆங்கில ஆட்சியாளர் நிருவாக முறையே அடிப்படையாக கொண்டிருந்தது. இதில் பிரதேசங்கள் தோறும் மணியகாரர்களையும் கிராமங்கள் தோறும் கிராமத்தலைவர்காரர்களையும் நியமித்து நிதிதிரட்டலையும் நிருவாகத்தையும் செயற்படுத்தினார்கள்.பின்னர் மணியகாரர் என்ற பெயர் பிரிவுக்காரியாதிகாரி என மாற்றம் செய்யப்பட்டு நிருவாகக் கட்டமைப்பு இயங்கியது. இப்பிரிவுக் காரியாதிகாரிகள் முன்னையரைப் போல் குடும்ப செல்வாக்கு பரம்பரைப் பெருமை அடிப்படையில் அல்லாது C.A.S என்னும் இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்தோரே நியமிக்கப்பட்டனர்.

1970 இல் பிரிவுக்காரியாதிரிகள் உதவி அரசாங்க அதிபர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள் இவ்வாறே 1963 இல் கிராம தலைக்காரன் முறை ஒழிக்கப்பட்டது. கிராம சேவகர்கள்/ கிராமத் தலைமைக்காரன் என்ற இரட்டைப் பதத்தோடு கிராம மட்ட  நிருவாக உத்தியோகத்தர் முறை கொண்டு வரப்பட்டது. உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு பிரதேசங்கள் தோறும் அதிகாரங்கள் பரவலாக்கபட்டு உதவி அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலர்களாக தரமுயர்த்தப்பட்டார்கள்.

பிரதேசசெயலர் முறை நடைமுறைக்கு வந்ததும் யாழ் கச்சேரியில் குவிந்திருந்த நிருவாக கட்டமைப்புகள் பன்முகப்படுத்தப்பட்டு பிரதேச செயலகங்களில் காணி, பிறப்பு, இறப்பு, மோட்டார்வாகன வரி, திட்டமிடல், நிதி, நிர்வாகம், ஒய்வூதியம், விளையாட்டு, மகளிர் அபிவிருத்தி, வீடமைப்பு அதிகாரசபை, சிறுவர் நன்னடத்தை, சமூக சேவைகள், கலாசாரம், முன்பிள்ளைபருவ அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, உளவளத்துனை போன்ற துறைகள் கொண்டுவரப்பட்டன. இம்முறை மக்கள் நீண்ட து}ரம் சென்று யாழ் கச்சேரியல் தமது அலுவல்கட்கு காத்திராமல் தமது பிரதேச செயலகங்களிலேயே தமது கருமங்களை இலகுவாக நிறைவேற்ற வழிகோலியது.

வலிகாகமம் கிழக்கு பிரதேசத்தின் பணியாற்றிய மணியகாரர் பிரவுக்காரியாதிரி, உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலர், உதவிப் பிரதேசசெயலர் விபரம் வருமாறு.

1. திரு.வேலுப்பிள்ளை - மணியகாரன்

2. திரு.தம்பிப்பிள்ளை - மணியகாரன்

3. திரு.தெய்வேந்திரப்பிள்ளை - காரியாதிகாரி

4. திரு.D.N செல்வரத்தினம் - காரியாதிகாரி

5. திரு.மு.சுப்பிரமணியம் - காரியாதிகாரி

6. திரு.தி.முருகேசம்பிள்ளை - காரியாதிகாரி

7. திரு.ச.சிறீநிவாசன் - காரியாதிகாரி

8. திரு.யோ.து சபாபதிப்பிள்ளை - காரியாதிகாரி

9. திரு.வேதாரணிய சேயோன் - காரியாதிகாரி

10. திரு.வ.கந்தப்பிள்ளை - காரியாதிகாரி

11. திரு.க.மாணிக்கவாசகர் - உதவி அரசாங்க அதிபர்

12. திரு.வ.சொக்கலிங்கம் - உதவி அரசாங்க அதிபர்

13. திரு.சி.அம்பலவாணர் - உதவி அரசாங்க அதிபர்

14. திரு.கி.கிட்டினர் - உதவி அரசாங்க அதிபர்

15. திரு.க.சபாபதிப்பிள்ளை - உதவி அரசாங்க அதிபர்

16. திரு.க.குலேந்திரா - உதவி அரசாங்க அதிபர்

17. திரு.சி.முருகேசபிள்ளை - உதவி அரசாங்க அதிபர்

18. திரு.இ.இளங்கோ - உதவி அரசாங்க அதிபர்

19. திரு.ககனகரத்தினம் - உதவி அரசாங்க அதிபர்

20. திரு.க.கேதீஸ்வரன் - உதவி அரசாங்க அதிபர்/பிரதேச செயலர்

21 திருக.சிறீநிவாசன் -பிரதேச செயலர்22. திரு.ஆ.மகாலிங்கம் - பதில் பிரதேச செயலர்

23. திரு.பு.சுந்தரம்பிள்ளை - பதில் பிரதேச செயலர்

24. திரு. செந்தில்நந்தன் - பதில் பிரதேச செயலர்

25. திருமதி சா.அஞ்சலிதேவி - உதவிப் பிரதேச செயலர்

26. திருமதி சி.நிமலினி - உதவிப் பிரதேச செயலர்

27 திரு.க.இராசதுரை - உதவிப் பிரதேச செயலர்

28. திரு.C.A. மோகன்றாஸ் - பிரதேச செயலர்

29.திரு.பிரதீபன்- பிரதேச செயலர்

30.திருமதி.ம.சுபாஜினி- பிரதேச செயலர்

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவு வளலாய் தொடக்கம் கல்வியங்காடு வரையான 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கெண்டது. இப்பிரதேசத்தின் மையத்தில் அமைந்த கோப்பாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவிலேயே இப்பிரிவின் நிருவாகக் கட்டமைப்பிற்கான அலுவலகம் அமைந்துள்ளது.

கோப்பாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இப்பிரதேசத்தின் நிருவாகத் தலைமையாகமான மணியகாரன் கந்தோர், பிரவுக்காரியதிகாரி பணிமனை, உதவி அரசாங்க அதிபர் பணிமனை அனைத்தும் தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள காணியில் இருந்த தனியாரின் மிகப் பெரிய வீட்டிலேயே இயங்கிவந்தன. 1995ஆம்; ஆண்டு இடம் பெற்ற “றிவிறச” இரானுவ நடவடிக்கையின் போது இத்தனியார் வீடு மிகப் பெரிய சேதமடைய 1996ம் ஆண்டு மீளக்குடியமர்வின் பின் தற்போது பிரதேச செயலக கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ள சோமசுந்தரம் இரத்தினசபாபதியின் இரண்டு வீடுகளில் இவ் அலுவலகம் இயங்கி வந்தது.

2000ம் ஆண்டில் அப்போதய பிரதேச செயலராக இருந்து திரு.கதிரவேலு கேதீஸ்வரனின் அயராத முயற்சியால் ஒவ்வோர் கிராம அலுவலர்களுக்கும் தத்தம் பிரிவுகளில் உள்ள பொது மக்களிடமும் சேர்த்த பணத்தில் தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள 17 பரப்பு காணியை சண்டிலிப்பாயில் உள்ள காணிச் சொந்தக்காரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்காணிக் கொள்வனவை முன்னின்று நடாத்திய அப்போதைய பிரதேச செயலர் திரு. கதிரவேலு கேதீஸ்வரனும் காணிக் கொள்வனவு நிர்வாக சபை உறுப்பினர்களும் அப்போதைய கிராம சேவையாளர்களும் அதற்குரிய பணத்தை தந்துதவிய வலிகாமம் கிழக்கின் ஒவ்வோர் குடிமகனின் பங்களிப்பும் என்றென்றும் மறக்கமுடியாததாகும்

1987ஆம் ஆண்டு வரை வலிகாமம் கிழக்கு பிரதேசம் 10 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டிருந்தது. கிராமங்களில் கிராம சேவகர்களும் மையத்தில் பிரதேச செயலரும் நிருவாகத்தின் அச்சாணிகளாக விளங்க ஏனைய உத்தியோகத்தர்கள் நிருவாக வலைப்பின்னல் ஊடாக நிருவாகத்தை தொகுத்து மக்களுக்கு பெரும்பணி செய்தனர். 

1987ஆம் ஆண்டு இப் பத்து கிராமசேவையாளர் பிரிவுகளும் 17 கிராமசேவையாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விசேடசேவை உத்தியோகத்தர்களும் கிராம சேவையாளர்களாக உள்வாங்கப்பட்டடு இப் 17 பிரிவுகளுக்கும் நியமிக்கப்பட்டனர்.

இக் கிராமசேவகர் பிரிவுகளின் குடித்தொகையை கருத்தில் கொண்டு குடித்தொகையின் அடிப்படையில் 1/3/1990 இல் இப் பிரிவுகள் 31 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிர்செய்கை உத்தியோகத்தர்களும்(CO) விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தர்களும்(KVS)கிராமசேவையாளர்களாக உள்வாங்கப்பட்டனர்.

1993ஆம் ஆண்டு கிராம சேவையாளர்கள் கிராம அலுவலர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.1998ம் ஆண்டு அதிசிறப்பு கிராமசேவையாளர் முறை நடைமுறைக்கு வந்தது. 1வது அதிசிறப்பு கிராம சேவையாளராக திரு.வே.சின்னத்துரையும் பின்னர் திரு.கா.சோ.சிவராசனும் கடமையாற்றினார்கள்.உதவி அரசாங்க அதிபர் பணிமனைகள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்ட போது பின்வரும் புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டன.

உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர் தற்போது உதவித்திட்டமிடல் பணிப்பாளராக திரு.இரத்தினராசா கிருஸ்ணராசனும்,கணக்காளராக திருமதி வசந்தமாலா மனோகரனும் பணியாற்றிவருகின்றனர்.நிர்வாக உத்தியோகத்தராக திரு.சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் கடமையாற்றிவருகின்றர்.

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் பொருளாதார வளங்கள் இப் பிரதேசம் கல்சிய செம்மஞ்சள் இலற்றசோல் எனப்படும் மண் வகையைக் கொண்ட செழிப்பான விவசாய பிரதேசமாகும். யாழ்-பருத்தித்துறை வீதிக்கு கிழக்கே வயலும் வயல்சார்த்த மருத நிலம் காணப்படுகிறது. இப் பிரதேச மக்களின் பெரும்பான்மையோரின் ஜீவனோபாயத் தொழில் விவசாயமாகும். யாழ். மாவட்டத்தில் வாழைப் பயிர்செய்கையில் 37 வீதம் செய்கை இப்பிரதேசத்திலேயே செய்யப்படுவதாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தெரிவிக்கிறர். குறிப்பாக நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய், ஊரெழு, அச்செழு, சிறுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவுகள் வாழைச் செய்கைக்கு பெயர் போன இடங்களாகும்.

இருபாலை கிழக்கு, இருபாலை தெற்கு,கோப்பாய் தெற்கு,கோப்பாய் மத்தி, கோப்பாய் வடக்கு நீர்வேலி தெற்கு, நீர்வேலி வடக்கு, சிறுப்பிட்டி கிழக்கு, புத்துார் கிழக்கு, ஆவரங்கால் கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் யாழ் பருத்தித்துறை வீதிக்கு கிழக்கு பக்கமான பிரதேசங்கள் நெற்செய்கைக்கு பெயர் போன பிரதேசங்களாகும்.மேலும் இக்கிராம அலுவலர் பிரிவுகளில் தெங்கும் கமுகும் செழித்து வளர்கின்றன.

கோப்பாய், உரும்பிராய், நீர்வேலி, அச்செழு, ஊரெழு போன்ற பிரதேசங்கள் மரக்கறி, சிறுதானியங்கள் என்பவற்றிற்கு பெயர் பெற்ற இடங்களாகும்.குறிப்பாக அச்செழு, ஊரெழு போன்ற கிராம அலுவலர் பிரிவுகள் மேல் நாட்டுமரக்கறிகளான பீற்றுாட், கரட், கோவா, கறிமிளகாய், லீக்ஸ், முள்ளங்கி என்பன சிறப்புற விளையும் பிரதேசங்களாகும்.

இடைக்காடு, வளலாய், சிறுப்பிட்டி, புத்துார் போன்ற பிரதேசங்களில் சின்ன வெங்காயம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. உரும்பிராய் ஊரெழு கிராமங்களில் பரீட்சாத்தமாக செய்கை பண்ணப்பட்ட திராட்சை மிகப்பெரும் வெற்றியளித்து இன்று பெரும் பணம் கொழிக்கும் பணப்பயிராக செய்கை பண்ணப்படுகிறது.

கால்நடைவளம்கல்வியங்காடு தொடங்கி இடைக்காடு வரையிலான 31 பிரிவுகளிலும் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, ஆவரங்கால் போன்ற வயலை அண்டிய பிரதேசங்களில் மந்தை மந்தையாக மாடுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் உற்பத்தித்திறன் குறைந்த உள்ளுர் இன மாடுகள் ஆகும். வhழைத் தோட்டங்களில் பட்டி அடைக்கவே இம்மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதேவேளை கோப்பாய், இருபாலை, உரும்பிராய், நீர்வேலி, ஊரெழு போன்ற பிரிவுகளில் உயர் இனப்பசுக்கள் வீட்டுத்தொழுவங்களில் வளர்க்கப்பட்டு இப்பிரதேசத்தின் பால் தேவையை பூர்த்திசெய்கின்றன.மேலதிக பால் கலாசாலை வீதியில் உள்ள பால் சேகரிக்கும் நிலையத்தால் சேர்க்கப்பட்டு பற்றாக்குறை நிலவும் பிரதேசங்கட்கு அனுப்பப்படுகிறது.ஆடுகளை பெறுத்தவரை உரும்பிராய், ஊரெழு, கோப்பாய், நீர்வேலிப் பகுதிகளில் நல்ல இன யம்புனாபாறி ஆடுகள் வீட்டுத் தொழுவங்களில் வளர்க்கப்படுகின்றன.

கால்நடை விவசாய வளங்களைத்தவிர இப்பிரிவில் உள்ள செம்மணிப் பகுதியில் உப்பு உற்பத்தியாக்கப்படுகிறது. செம்மணி உப்பளத்தில் உற்பத்தியாக்கப்படும் உப்பு பிற இடங்களுக்கு அனுப்பபடுகிறது.இது தவிர இப்பிரதேசம் பனை, மூலிகை வளங்களுக்கும் பெயர் போன இடங்களாகும் இவ்வளங்கள் சரியான முறையில் இனம் காணப்பட்டு உரிய முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.

வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள்

1.நிலாவரை வற்றா நீர் ஊற்று

2.பொக்கணை நீருற்று 

3.நீர்வேலி அரச கேசரிப்பிள்ளையார் கோவில்

4.கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்

News & Events

08
அக்2020
பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020

பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020

எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை...

08
அக்2020
கௌரவ அமைச்சர் விஜயம்

கௌரவ அமைச்சர் விஜயம்

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை,...

09
செப்2020
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின்...

08
ஜூலை2020
காசோலை வழங்கும் நிகழ்வு

காசோலை வழங்கும் நிகழ்வு

Deaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில்...

12
ஜூன்2020
உலக சுற்றாடல் தினம்-2020

உலக சுற்றாடல் தினம்-2020

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி...

03
ஜூன்2020
The second phase of payments of Rs.5000

The second phase of payments of Rs.5000

  The second phase of payments of...

13
பிப்2020
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி

பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி

பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டியில் வெற்றி...

05
பிப்2020
72 வது சுதந்திர தினம்- 2020

72 வது சுதந்திர தினம்- 2020

72 வது சுதந்திர தினம் 2020.02.04  ம் திகதி...

27
ஜன2020
வருடாந்த ஒன்றுகூடல்-2019

வருடாந்த ஒன்றுகூடல்-2019

ஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...

20
ஜன2020
பொங்கல் விழா - 2020

பொங்கல் விழா - 2020

இன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...

01
ஜன2020
2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு

2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு

2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...

30
டிச2019
சூாிய கிரகணம்-2019

சூாிய கிரகணம்-2019

2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...

13
டிச2019
கைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019

கைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019

"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...

12
டிச2019
நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு

நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு

கோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...

12
டிச2019
Hardware Training-2019

Hardware Training-2019

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...

12
டிச2019
இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019

இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019

''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...

18
நவ2019
First aid-2019

First aid-2019

மாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...

08
நவ2019
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-2019

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-2019

இன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...

குடியுரிமை சாசனம்

News & Events

08
அக்2020
பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020

பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020

எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை...

08
அக்2020
கௌரவ அமைச்சர் விஜயம்

கௌரவ அமைச்சர் விஜயம்

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை,...

09
செப்2020
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின்...

08
ஜூலை2020
காசோலை வழங்கும் நிகழ்வு

காசோலை வழங்கும் நிகழ்வு

Deaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில்...

12
ஜூன்2020
உலக சுற்றாடல் தினம்-2020

உலக சுற்றாடல் தினம்-2020

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி...

03
ஜூன்2020
The second phase of payments of Rs.5000

The second phase of payments of Rs.5000

  The second phase of payments of...

13
பிப்2020
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி

பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி

பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டியில் வெற்றி...

05
பிப்2020
72 வது சுதந்திர தினம்- 2020

72 வது சுதந்திர தினம்- 2020

72 வது சுதந்திர தினம் 2020.02.04  ம் திகதி...

27
ஜன2020
வருடாந்த ஒன்றுகூடல்-2019

வருடாந்த ஒன்றுகூடல்-2019

ஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...

20
ஜன2020
பொங்கல் விழா - 2020

பொங்கல் விழா - 2020

இன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...

01
ஜன2020
2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு

2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு

2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...

30
டிச2019
சூாிய கிரகணம்-2019

சூாிய கிரகணம்-2019

2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...

13
டிச2019
கைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019

கைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019

"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...

12
டிச2019
நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு

நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு

கோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...

12
டிச2019
Hardware Training-2019

Hardware Training-2019

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...

12
டிச2019
இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019

இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019

''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...

Scroll To Top